Friday, November 5, 2010

மணிப்பிரவாள எழுத்து முறை என்ற ஒன்றை வேண்டுமானால் அமைக்கலாம்.-பேராசிரியர் செ. வை. சண்முகம்



கிரந்த எழுத்துக்களோடு தமிழுக்கு உரிய ஐந்து எழுத்துகளைச் சேர்ப்பதன் நோக்கம் என்ன? முன்னரே தமிழுக்கென முழுமையான எழுத்து முறையோடு கூடிய வரிவடிவம் இருக்கிறது  மேலும் அது குறைந்தது 2000 ஆண்டு பழமை உடையது. கிரந்த எழுத்து தென்னிந்தியாவில் வடமொழியை எழுத உருவாக்கப்பட்ட வடிவம்.  அது 1500 ஆண்டு பழமை உடையது. இந்த நிலையில் இந்தக் கலப்பின் நோக்கம் என்ன?    தமிழின் வரிவடிவம் தனித்துவம் உடையது என்பதற்குக் காரணம் தமிழின் ஒலியமைப்பும் அவை மொழிக்குள் வழங்கும் முறையை ஒட்டி அமைந்த ஒலியன் அமைப்பும் ஆகும்.  அது, பிற இந்திய மொழியின் ஒலி, ஒலியன் அமைப்புபை முறையிலிருந்து மாறுபட்டது அந்த மாறுபாட்டைக் குறைக்க வேண்டும் என்று கருதிக் கிரந்த எழுத்துக்களோடு தமிழுக்கு உரிய ஐந்து எழுத்துகளைச் சேரத்து அது தமிழுக்கு உரிய வரிவடிவம் என்று கொள்ள வேணடும் என்பது மறைமுகமாகத் திணிக்கும் முயற்சியா?  எனவே அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால் அவை தமிழ் மொழியின் ஒலியன்  அமைப்பைப் கிரந்த எழுத்து பிரதிபலிக்கவில்லை. மேலும் ஒரு மொழியில் வழங்காத ஒலிகளுக்கும் ஒலியன்களுக்கும் வரிவடிவங்கள் உடையதை அந்த மொழியின் வரிவடிவமாக யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள். மொழியியல் என்ற தனித் துறை வளராத காலத்திலேயே வரிவடிவம் அல்லாத மொழிகளுக்கு வரிவடிவம் அமைத்தவர்கள் கூட அந்த மொழியில் ஒலியனாகச் செயல்படாத ஒலிகளுக்கு வரிவடிவம் அமைக்கவில்லை என்று உலக மொழி வரலாறு காட்டுகிறது. அந்த நிலையில் மொழியியல் என்ற ஆய்வுத் துறை வளர்ந்து தமிழில் வழங்கும் ஒலிகள், அவை ஒலியனாககச் செயல்படும் தருக்க ரீதியாகவும் கோட்பாட்டு நிலையிலும் பலரும் அறிந்துள்ள நிலையில் இது யாருக்குப் பயன்படப்போகிறது.  
யூனிகோடுக்காக என்று காரணம் சொல்லப்படுகிறது. அதன் விவரம் எனககுத் தெரியவில்லை. 
 மாறாக இன்னொரு திட்டத்தை நினைத்துப்பார்க்கலாம்  

     கிரந்த எழுத்து தென்னிந்தியாவில் வடமொழியை எழுத உருவாக்கப்பட்ட வடிவம்.  தமிழ் மொழிக்கான வடிவம் இல்லை. தமிழ்க் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளோடு கிரந்த எழுத்தையும் கையாண்டுள்ளது உண்மையே.  கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்த நூல்களும் சில உள்ளதும் உண்மையே .   அவை மணிப் பிரவாள நடை உடையவை என்று அழைக்கப்படுகின்றன.   அவை போன்ற ஆவணங்களைப் படிக்க உதவவேண்டும் என்று எண்ணினால் தமிழ் மொழியின் எல்லா எழுத்துக்களையும் (அதாவது 31 எழுத்துகளையும் உயிர் எழுத்தின் மாற்று வடிவங்களையும்) கிரந்த எழுத்துகளையும் சேர்த்து மணிப்பிரவாள எழுத்து முறை என்ற ஒன்றை வேண்டுமானால் அமைக்கலாம். அதில் யாருக்கும் தடை இருக்காது. ஏனென்றால் அது தமிழ் அல்லாத பிற மொழியாளர் மணிப்பிரவாள இலக்கியங்களைப் படிக்கத் தூண்டும்,   உதவியாக இருக்கும்.  




-- 

No comments:

Post a Comment