Friday, November 5, 2010

சமையல் குறிப்புகள் : வித்தியாசமான கறி..

.தமிழறிஞர் வி .எஸ் .ராஜம் அவர்களின் கைவண்ணம் 



வெங்காயத்தாள், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்துச் செய்த கறி. 


1. வெங்காயத்தாளை நன்கு கழுவிக் கீறி எடுத்துக்கொள்ளவும்.



2. நல்ல உருளைகிழங்கு ஒன்றைக் கழுவிக் கீறி எடுத்துக்கொள்ளவும்.


3. நல்ல பாத்திரத்தில் ("வாணலி" "சட்டி") சிறிது ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு... கடுகு, சோம்பு, சீரகம் தாளிக்கவும்.

4. நறுக்கிவைத்த காய்களை அந்தப் பாத்திரத்தில் போட்டு, தேவையானால் உப்பும் கலந்து, வேகவைக்கவும்.

5. உருளைக்கிழங்கு கடிபடும் பதத்தில் (fork tender), சிறிது மஞ்சள் தூளைச்சேர்த்துக் கலக்கவும்.

6. நல்ல சிறு தக்காளிகள் சேர்க்கவும்.


7. தேவையானால் ... விருப்பமான மசாலாப் பொடியைக் கொஞ்சம் தூவிக் கிளறவும்!

8. தேவையானால் கொஞ்சம் பட்டாணியையும் சேர்த்துக் கிளறவும்.

9. ஒரு 5~7 நிமிடத்திற்குப்பின் இந்தச் சத்துள்ள உணவு தயார்!

No comments:

Post a Comment