ஒரு நூலகம் சிறப்பாகச் செயல்படவேண்டுமென்றால் அங்கு நூல்களை நேசிக்கும் நூலகர் இருக்கவேண்டும். தற்போது தம்ழ்நாடு பொது நூலகத்துறை புத்தெழுச்சி பெற்றுவருகிறது. அதன் இயக்குனராக திரு. அறிவொளி பொறுப்பேற்ற பிறகு அந்தத் துறையைச் சீரமைக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கிவிட்டார். மாவட்ட அளவிலான நூலகர்களுக்குப் பயிற்சி முகாம் ஒன்றை மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்தார். அந்த முகாமில் கலந்துகொண்டு நூலகர்களிடையே பேசுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திரு. அறிவொளியோடு இப்போது துணை இயக்குனராக திரு. நரேஷ் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த காலத்தை அம் மாவட்டப் பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
கடந்த வாரத்தில் நான் இயக்குனர் திரு அறிவொளி அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போதுதான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் பார்க்க வாருங்கள் என்று திரு.நரேஷ் என்னை அழைத்தார். நூலகத்தைப் பார்ப்பதற்கான அழைப்பை எப்படி மறுக்க முடியும்? அடுத்த நாளே அங்கு போய்விட்டேன்.
அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் பார்வையற்றோருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் வசதிகள் பிரமிக்க வைத்தன. தென்னிந்தியாவில் வேறு எங்கும் இத்தகைய வசதிகள் இல்லை என நூலகர்கள் கூறினார்கள்.
மூன்று தளங்கள் இப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கெனத் திறந்துவிடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான தளத்தில் ஏராளமான புத்தகங்களும், விளையாடுவதற்குக் கணினிகளும் உள்ளன.
வெளியூர்களிலிருந்து சென்னைக்குச் செல்பவர்கள் படிப்பதற்காக அல்லவென்றாலும் பார்ப்பதற்காகவேனும் இந்த நூலகத்துக்குச் செல்லவேண்டும்.
Unless we do an Access Audit, we cannot really conclude that the Library is indeed a blessing for visually challenged persons!!
ReplyDeleteI was a part of the team that did an Audit of the Bristish Council Library, Chennai recently and even after so much meticulous planning and thoughtful design, there was much room for improvement. While the new Anna Centenary Library itself is commended, unless the specific needs and inputs of the end users are carefully and continuously sought and suitable modifications made in an ongoing manner, no public space ( including libraries) can be satisfactorily utilised by people with special needs.
- Dr Aiswarya Rao