Saturday, November 13, 2010

உலகத் தமிழ் அமைப்பு




அன்புமிக்க திரு ரவிகுமார் அவர்களுக்கு,
 
வணக்கம். கிரந்தத்தில் தமிழை திணிக்கும் முன்மொழிவிலும், தமிழில் கிரந்தத்தை திணிக்கும் முன்மொழிவிலும் தாங்கள் ஆற்றிய பணிகளுக்கு உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக நன்றிகள் பல.
 
யூனிக்கோட்டில் கிரந்தத்திற்கு இடையில் தமிழை நுழைக்க இருந்த சதித்திட்டம்தங்களது சீரிய முயற்சியினால் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. கடைசி நேரத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் நேரடித் தலையீட்டால் இப்போராட்டத்தில் முதல் வெற்றியை நம்மால் பெறமுடிந்தது. ஆனால் யூனிகோடு நிறுவனம் இறுதி முடிவை பிப்ரவரி திங்கள் வரை தள்ளிப் போட்டுள்ளனர். அதற்குள் நாம் நடுவண் அரசை வற்புறுத்தி  முழு வெற்றியடைய வேண்டும். பல அரசியல் தலைவர்கள் இதில் அக்கறை காட்டத் தவறியநிலையில் தாங்கள் இந்தப் பிரச்சினையை நன்கு புரிந்துகொண்டு கிரந்தத்தில் சிறப்புத் தமிழெழுத்துக்களான "ழ,ஒ" ஆகிய எழுத்துக்களை நீக்க வேண்டும் என்று அயராது உழைத்தற்கு நன்றிகள் பல. இந்தச் சிக்கல் தவிர திரு சிரீரமண சர்மா அவர்களின் தனிப்பட்ட முன்மொழிவில் தமிழில் 26 கிரந்த எழுத்துக்களை சேர்க்கும் முயற்சியும் தங்களின் அரிய முயற்சியால் தடைக்குள்ளாகிவுள்ளது.

இறுதி முன்மொழிவில் தமிழ் எழுத்துக்கள் ஏதும் இல்லாதவாறு காக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

நன்றியுடன்,
தில்லை குமரன்
உலகத் தமிழ் அமைப்பு

No comments:

Post a Comment