Friday, November 5, 2010

சமையல் குறிப்புகள் : சாமை, தேங்காய்க் கலவையில்.

தமிழறிஞர் வி .எஸ் .ராஜம் அவர்களின் 


கைவண்ணம்

சாமை என்பது millet என்று அறியப்படுவது. இது மிகவும் சத்துள்ள தானியம். வேகவைக்கும்போதே இதன் சுண்ணாம்புச்சத்தின் நறுமணம் பரவும்.

இங்கே சாமையை எளிதில் பயன்படுத்திச் சுவைக்கும் முறை. பலருக்கும் அறிமுகமான, அரிசியைப் பயன்படுத்திச் செய்யும் "தேங்காய்ச் சாதம்" போல.

1. ஒரு சிறு கோப்பை அளவு சாமை எடுத்துக் கழுவி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.




2. சாமையை ஒரு நல்ல பாத்திரத்தில் ஒன்றுக்கு 2 மடங்கு தண்ணீரில் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.



3. சாமை மலர்ந்தாற்போல் வெந்தவுடன் பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே எடுத்துவைக்கவும்.

4. மலர்ந்து வெந்திருக்கும் சாமையைத் தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.



5. நல்ல வாணலியில் துருவிய தேங்காய் (ஒரு பங்கு வெந்த சாமைக்கு 1/8~1/4 பங்காக) போட்டு, பொன் நிறமாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

6. அதே வாணலியில் எண்ணைய் இல்லாமலே கடுகும் உளுத்தம் பருப்பும் தாளித்து எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு மிளகாய் வத்தலும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.



5. பச்சைக் கறிவேப்பிலைத் தழை, சிறிதளவு பெருங்காயம் கலக்கவும்.

6. மேற்கண்ட பொருட்களை ஏற்கனவே வெந்து வைத்திருக்கிற சாமையில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.


7. தேவையானால் வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றி : http://viruntu.blogspot.com/2010/10/blog-post_6982.html

1 comment:

  1. தெளிவான நல்ல விளக்கம், மிக அருமையான படங்கள். உலகப்புகழ் பெற்ற தமிழறிஞர் சமையற்கலை மிளிர, ஒளிப்படங்களுடன் படைக்கும் இவை என்னளவில் வரலாற்றுப் புகழ் மிக்கவை! விரைவில் தொகுத்து நூலாக இட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றேன்.

    ReplyDelete