Friday, November 5, 2010

சமையல் குறிப்புகள் : ரசமோ ரசம்..

.தமிழறிஞர் வி .எஸ் .ராஜம் அவர்களின் கைவண்ணம்

 "சுள்"-ன்னு ஒரு மிளகு-சீரக ரசம். 

(அம்மா செஞ்சது...)

1. ஒரு சிறிய எலுமிச்சையளவிற்குப் புளி எடுத்து (மண், கல், கொட்டை நீக்கி), நீர்க்கச் சாறு எடுத்துத் தனியே வைக்கவும்.

2. உள்ளங்கையளவு துவரம்பருப்பு, 5~6 மிளகு, 1/2 teaspoon சீரகம், 2~3 வற்றல் மிளகாய் ("செத்தல் மிளகாய்") -- இவற்றைத் தூசி போக எடுத்து, tea வடிகட்டியில் போட்டுக் கழுவியெடுத்து, கொஞ்சம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

3. ரசம் வைக்கும் பாத்திரத்தில் ("ரசச் சொம்பு") புளிச்சாற்றை ஊற்றி, 2~3 வற்றல் மிளகாய் கலந்து கொதிக்க வைக்கவும். (மிகச்சிறிய அளவு உப்புச் சேர்க்கலாம்.) புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவேண்டும்.

4. (புளிக் கரைசல் கொதித்துக் கொண்டிருக்கும்போது) நன்கு ஊறியிருக்கும் துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வத்தல் இவற்றோடு கறிவேப்பிலை இதழ்கள் 4~5 சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

5. அரைத்த விழுதை, புளிக்கரைசலில் கலந்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும். (பக்கத்திலேயே இருந்து கவனிக்கவேண்டிய விஷயம்!)

6. மேலே சொன்ன புளிக்கலவையைக் கரண்டியால் ஒரே ஒரு தடவை கலக்கிவிட்டு, அப்புறம் கரண்டியால் அந்தக் கரைசலைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்து, "மொச்" என்று கொதி வரும்வரை கொதிக்கவிடவும்!! படம் பார்க்க:



7. ரசம் பொங்கிவரும்போது, பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்துவிடவும்.

8. கடுகும் கறிவேப்பிலையும் தாளிக்கவும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"கம்" என்று ஒரு பருப்பு ரசம்
(பையன் செஞ்சது...)

No comments:

Post a Comment