Thursday, November 18, 2010

செனட் உறுப்பினராக ரவிக்குமார் எம்எல்ஏ நியமனம்





செனட் உறுப்பினராக ரவிக்குமார் எம்எல்ஏ நியமனம்

First Published : 16 Nov 2010 11:38:11 AM IST





சிதம்பரம், நவ. 15: தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமாரை முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் நியமித்துள்ளார்.
செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ரவிக்குமார் திங்கள்கிழமை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உடனிருந்தார்.

2 comments:

  1. தோழருக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தொழர்.

    ReplyDelete