Saturday, November 13, 2010

பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் பேருந்துகள்





10.11.2010


 காலை  10.05 மணி 
வினாக்கள் விடைகள் 
துணை கேள்வி 

திரு . து. ரவிக்குமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே நமது அரசு செயல்படுத்திவருகின்ற மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் ஏராளமானோர் பயனடைந்துகொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த செய்தி. கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வருகின்ற நேரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக பல மாணவர்களால் பள்ளிக்கே வரமுடியாத சூழல் இருக்கிறது. எனவே மாணவர்கள் பள்ளிக்கு வருகின்ற நேரத்திலும் பள்ளியிலிருந்து திரும்பிச் செல்கின்ற நேரத்திலும் கூடுதல் பேருந்துகளை இயக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதைத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன். 

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் 

மாண்புமிகு திரு. கே.என்.நேரு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு பரிட்சார்த்தமான முறையில் சென்னை மாநகரில் எந்தெந்த சாலைகளில் பள்ளிகள் அதிகமாக இருக்கின்றன எங்கே எவ்வளவு மாணவர்கள் பயணிக்கிறார்கள் அந்த மாணவர்களின் இருப்பிடம் எங்கே இருக்கிறது என்பதையெல்லாம் கண்டறிந்து முதலில் ஒரு ஐம்பது பேருந்துகள் மாணவர்களுக்காக இப்பொழுது சென்னை மாநகரத்திலே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில் நமது துறையின் சார்பாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் தமிழ்நாடு முழுவதும் ஒரு கணக்கெடுப்பு நடத்தவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கின்றது. எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்த நேரத்தில் , குறிப்பாக மாணவர்கள் தங்குதடையின்றி பள்ளிக்குச் செல்வதற்கு பேருந்துகளை விடவேண்டுமென்று அவர்கள் கணக்கெடுப்பு எடுத்துத் தந்த பிறகு மாணவர்களுக்காக சென்னையில் இப்பொழுது எப்படி செய்யப்பட்டிருக்கிறதோ அதேபோன்று பல மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 

1 comment:

  1. நல்ல முயற்சி. பாராட்டபடவேண்டியது. குழந்தைகளை கதைசொல்லிகள் மூலம் புத்தகம் படிக்கம் பழக்கம் வர வைக்கலாம்.

    ReplyDelete