கடந்த ஆண்டு நாசாவின் ராக்கெட் ஒன்று நிலவில் மோதி ஏற்படுத்திய பள்ளம் தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். நாசாவின் ‘ல்க்ராஸ்’விண்வெளி திட்டத்தின்படி, நிலவின் தென்கோடியில் மிகவும் ஆழமான, இருட்டான பள்ளம் ஒன்றில் ராக்கெட் ஒன்று ஏவப்பட்டது. இந்த பள்ளத்திற்குள் ஒரு போதும் சூரிய வெளிச்சம் பட்டதில்லை. மேலும் இந்த இடமானது சூரிய குடும்பத்தில் மிகவும் குளிர்ச்சியான பகுதி என்றும் எண்ணப்படுகிறது. ராக்கெட் பள்ளத்தை தாக்கியவுடன், பள்ளத்தில் இருந்து புகை மற்றும் வாயுக்கள் வெளியாகின, இதனை ராக்கெட் பின்னாலே சென்ற விண்கலம் பதிவு செய்தது, பின்னர் அந்த தகவல்கள் ஆராய்ப்பட்டன. ராக்கெட் மோதியவுடன் பெரும் புகை அல்லது பெரும் ஜாலம் ஏற்படும் என்று நினைத்து இருந்த ஆராய்ச்சியாளர்கள் அவ்வாறு இடம்பெறாத காரணத்தால் முதலில் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் ஆச்சரியங்கள் தங்களுக்கு காத்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் இப்போது தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் தன்னுடைய கணிப்புகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஷுல்ஸ் ‘சைன்ஸ் திஸ் வீக்’ என்ற சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளார். இதில் அந்த பள்ளத்தின் அடித்தளத்தில் தண்ணீர் மற்றுமன்றி இன்னும் ஏராளமான பொருட்கள் இருப்பதாக கூறியுள்ளார். கரியமிலவாயு, அமோனியா, உப்பு, வெள்ளி போன்றவை இங்கே இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு இப்போது கிடைத்திருக்கும் தகவல்கள் சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பதற்கான பதிலை கண்டுபிடிக்கவும் உதவலாம் என்று கருதப்படுகிறது. நன்றி : பி பி சி தமிழோசை |
Saturday, October 23, 2010
நிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர்!
Subscribe to:
Post Comments (Atom)
"வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்" என்ற வரி ஞாபகத்திற்கு வருகிறது. நல்ல பகிர்வு!
ReplyDelete