Monday, October 25, 2010

எதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமார்





பறவைகள்
 

வாஷிங்க்டன் ஏரிக்கு அருகில் 
பிற்பகல் மாறுகிறது இதமாக 
முன்வசந்தத்தின் சூரியனோடு 

உனது முகம் உனது கைகள் உனது கால்கள் 
புரள்கின்றன உனது படுக்கையில் 
எனதைக் கண்டுபிடித்தவாறு 

எரி நெடுகிலும் 
பறவைகள் வெறித்திருக்கும் நமது வீட்டின் 
சன்னல்களை 
நான் நீச்சல் பழகுகிறேன் 
உனது ஈரத்தில் 

பசி 
அவள் தனது தட்டில் உணவை அளையும்போது
அவனும் அலைப்புறுகிறான்
அவளது உதட்டுக்கு அருகில் செல்லும் உணவைப் 
பின்தொடர விரும்பினான் . அதற்குமேலும் .
அவளுக்குள் நல்ல உணவைப்போல 
சென்றுவிட ஆசைப்பட்டான் 
அவனும் பசியோடிருந்தான் 

மூவரின் நிலைப்படம் 

சில நேரங்களில் நாம் 
மூவர் மட்டும்தான் 
நீ 
நான் 
உன் சைக்கிள் 
சில நேரங்களில் நான் பொறாமை கொள்கிறேன் 
எப்படி அந்தச் சக்கரங்கள் சுழல்கின்றன 

எப்படி உன் கைகள் 
சைக்கிளின் கைப்பிடியைப் பிடித்திருக்கின்றன 
நீ பிரிந்து செல்லும்போது 

No comments:

Post a Comment