உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுநாளின் போது தமிழக முதல்வர் அறிவிப்புச் செய்ததையொட்டி ' தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் ' என்ற அமைப்பு இப்போது தமிழக அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கென நூறு கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. பதினான்கு பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த அமைப்புச் செயல்படும்.
அ . இனிவரும் காலங்களில் உலகத் தமிழ் மாநாடுகளைத் தமிழகத்திலும் அயல் நாடுகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்துவது குறித்து இந்த அமைப்பு முடிவு செய்யும்.
ஆ . தமிழ் மொழி , கலை , மரபு , பண்பாடு குறித்த நிரந்தரக் கண்காட்சி ஒன்றை அமைப்பது ;
இ . தமிழ் மொழியின் அனைத்து கூறுகளையும் வளர்த்தெடுக்கும் ஆவணக் காப்பகத்தை உருவாக்குவது ;
ஈ . தனித் தீவுகளாக இயங்கிவரும் தமிழ் ஆய்வு நிறுவனங்களை ஒருங்கிணைப்பது ;
உ . தன்னலம் பாராமல் தமிழ் மொழியின் மேன்மைக்கென உழைத்துவரும் தமிழ் அறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் பணிகளுக்கு உரியவகையில் உதவுவது
ஊ . உலகமெங்கும் இருக்கிற தமிழ் அமைப்புகள் , தமிழ் ஆய்வாளர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் விதமாக அவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்றைத் தயாரிப்பது
- உள்ளிட்ட பல்வேறு பணிகள் அந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
மைய அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் செம்மொழி நிறுவனமும் இந்த அமைப்பும் வேறு வேறு .
No comments:
Post a Comment