Thursday, October 28, 2010

காவிரி சிக்கல் முற்றுகிறது

http://www.worldservice.com/tamil



தமிழக முதல்வர் கருணாநிதி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிடாவிட்டால், சட்டப்படி மாநிலத்திற்கு வந்து சேர வேண்டிய தண்ணீருக்காக தொடர்ந்து வாதாடுவோம் எனக் கூறியிருக்கிறார்.

பெங்களூரில் புதனன்று நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தற்போதைக்குத் தண்ணீர் தர முடியாது என முடிவெடுக்கப்பட்டதாக அம்மாநிலம் அறிவித்திருக்கிறது.
அது குறித்து வியாழனன்று செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியைக் கேட்டபோது அவர், பத்திரிகைகளிலே வரும் செய்திகளை வைத்துக்கொண்டு தான் பதில் சொல்ல விரும்பவில்லை, அவ்வாறு செய்வதால் இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றும் அதை தான் விரும்பவில்லை என்றும் ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, எனவே சட்டப்படி நாங்கள் அப்பிரச்சினையை அணுகுவோம் என்றும் பதிலளித்தார்.
காவிரி நதி நீர் ஆணையத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, இந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய நீர் வரவில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு எழுதியுள்ள் கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாகவும், அது குறித்து ஆலோசனை நடத்தவே அனைத்துக் கட்சி கூட்டம் அங்கே நடத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கூட்ட முடிவில் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் பசவராஜ் பொம்மை கிருஷ்ணராஜ் சாகரில் போதிய அளவு நீர் இல்லை என்றும் மழைபெய்து அது நிரம்பினால், உபரி நீர் தானாகவே தமிழகம் போய்ச் சேரும் என்றும் கூறியிருக்கிறார்.
மேட்டூரில் நீர் குறைவாகவே இருக்கிறது, வடகிழக்குப் பருவமழையும் இன்னமும் துவங்காத நிலையில் தமிழகத்தில் சம்பா பயிர் நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக கருதப்படுகிறது.

( காவிரி நீர் சிக்கல் குறித்து நான் எழுதிய கட்டுரையைக் கீழே பார்க்கவும் )

No comments:

Post a Comment