Friday, October 29, 2010

அலி ஆகி ஆடி உண்பார்திரு க ப அறவாணன் அவர்கள் தொகுத்து வெளியிட்டிருக்கும் அறநூல்கள் களஞ்சியத்தைப் பார்க்க நேர்ந்தது. அதைப் புரட்டிக்கொண்டிருந்தபோது நாலடியாரில் இருக்கும் சில பாடல்களை வாசித்தேன். அதன் பின்னர் இணையத்தில் இருக்கும் பிரதியைப் படித்தேன். ஒரு பாடல் கவனத்தை ஈர்த்தது:


"செம்மை ஒன்று இன்றி , சிறியார் சினத்தர் ஆய்
கொம்மை வரி முலையாள் தோள் மரீ இ - உம்மை 
வழியால் பிறர் மனைமேல் சென்றாரே - இம்மை 
அலி ஆகி ஆடி உண்பார்
" Those who in a former state without any regard to right, becoming associates of the mean ,enjoyed the embraces of beautiful women , and by violence approached their neighbor's wife, in this state became eunuchs and dancing shall earn their bread " என்பது ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு. 
அலிகள் ஆடிப் பிழைத்ததாக இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆடிப் பிழைத்தல் அவ்வளவு ஏளனமாகச் சொல்லப்பட்டது ஏன் ? அலிகள் நடனக் கலைஞர்களாக  இருந்தார்களா ? அல்லது நாடோடிகளாகத் தெருக்களில் நடனம் ஆடி ஜீவித்தார்களா ? வேறு குறிப்புகள் எங்கேனும் இருக்கின்றனவா ? 
அன்புடன் 
-ரவிக்குமார் 

3 comments:

 1. சில நாட்கள் முன் CTamil குழுமத்தில் "பேடு" என்ற சொல் பற்றி மடலாடல் நிகழ்ந்தது.

  திரு செல்வா ஓர் இழையில் சொல்லியிருந்தார்:
  "... (If someone can point to பேடு (pETu) as middle finger, the longest finger, from textual
  evidence I would be grateful) ...."

  அது தொடர்பாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, 18-கீழ்க்கணக்கு நூல்களிலும் சில இலக்கண நூல்களிலும் இச்சொல்லைத் தேடினேன்.
  கிடைத்த குறிப்புக்களை இங்கே மிண்டும் தருகிறேன். இலக்கிய வரிகளைத் தமில் எழுத்தில் பெயர்த்தெழுத நேரமில்லை.
  பொறுத்தருளவேண்டும்.

  இந்தக் குறிப்புக்கள் உங்களுக்குப் பயன்படுமோ இல்லையோ தெரியவில்லை.

  1. அகநானூற்றில் "பேடி பெண்கொண்டு ஆடுகை" என்ற குறிப்புக் கிடைக்கிறது. (அக 206: 1-3).
  2. அதன் பிறகு சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் "பேடிக் கூத்து" பற்றிக் குறிப்பு உண்டு.
  3. குறளும் முதுமொழிக்காஞ்சியும் "பேடி" பற்றிச் சொல்லுகின்றன.
  4. இலக்கண நூல்களின் உரைகளில் "பேடு, பேடி, அலி" என்ற சொற்களுக்கு விளக்கமும் எடுத்துக்காட்டும் கிடைக்கின்றன.
  குறிப்புக்கள் பின்வருமாறு:
  +++++++++++++++++++++++++++++++++++++
  (In "eṭṭuttokai" and "pattuppāṭṭu")
  ------------------------------------------
  aka 206: 1-3
  eṉ eṉa-p-paṭum-ō tōḻi naṉ-makiḻ-p
  pēṭi peṇ-koṇṭu āṭukai kaṭuppa
  naku-var-p paṇaitta tiri-maruppu erumai ...

  +++++++++++++++++++++
  (In the 18 didactic texts...)
  ---------------------------------

  kuṟaḷ 614
  tāḷāṇmai illātāṉ vēḷāṇmai pēṭi kai
  val-āṇmai pōla-k keṭum

  kuṟaḷ #727
  pakai-akattu p pēṭi kai oḷ vāḷ avai akattu
  añcumavaṉ kaṟṟa nūl

  mutumoḻikkkāñci 4: 1-5
  ārkali ulakattu makkaṭku ellām
  paḻiyōr celvam vaṟumaiyiṉ tuvvātu
  kaḻi-taṟukaṇmai pēṭiyiṉ tuvvātu
  nāṇ-il-vāḻkkai pacittaliṉ tuvvātu
  pēṇ-il-vāḻkkai māṟṟal-iṉ tuvvātu

  ++++++++++++++++++++++++++++++++++++++
  (In "cilappatikāram" and "maṇimēkalai"
  --------------------------------------
  cilap. 6: 56-57
  āṇmai tirinta peṇmai-k kōlattu-k
  kāmaṉ āṭiya pēṭi āṭal-um

  cilap. 185-187
  vaḷar-iḷa-vaṉa-mulai t taḷar-iyal-miṉ-iṭai p
  pāṭaka-c-cīṟaṭi āriya-p-pēṭi-ōṭu
  eñcā maṉṉar iṟaimoḻi maṟukkum

  cilap. 28: 59-61
  vaṇṇam-um cuṇṇam-um malar-pūm-piṇaiyal-um
  peṇ-aṇi-p-pēṭiyar ēntiṉar oru-cār
  pū-um pukai-um mēviya virai-um

  maNi. 3: 24-26
  āṭavar kaṇṭāl akaṟal-um-uṇṭu-ō
  pēṭiyar-aṉṟō peṟṟi-iṉ niṉṟiṭiṉ
  āṅkaṉam aṉṟiyum aṇiyiḻai kēḷāy

  maNi. 3: 124-126
  nīḷ-nilam-aḷantōṉ-makaṉ muṉ-āṭiya
  pēṭi-k-kōlattu p pēṭu kāṇkunar-um
  vampa-mākkaḷ kampalai mūtūr c

  maNi. 3: 145-147
  kāṇmiṉ-ō eṉa k kaṇṭu niṟkunar-um
  virāṭaṉ pēr-ūr vicayaṉ-ām-pēṭi-ai k
  kāṇiya-cūḻnta kampalai mākkaḷ-iṉ

  ++++++++++++++++++++++++++++
  (In the "tolkāppiyam" and "naṉṉūl")
  ---------------------------------------------

  tolkāppiyam collatikāram 4 (kiḷaviyākkam):

  peṇmai cuṭṭiya uyar-tiṇai maruṅkiṉ
  āṇmai tirinta peyar-nilai-kiḷavi...

  Iḷampūraṇar's examples:
  "pēṭi vantāṉ, pēṭi vantāḷ, pēṭiyar vantār eṉavum ... varum."


  naṉṉūl 264:

  "peṇmai viṭṭu āṇ avāvuva pēṭu āṇpāl
  āṇmai viṭṭu allatu avāvuva peṇpāl
  irumaiyum aḥṟiṇai aṉṉavum ākum"

  Very interesting commentary is available. but it will take a while for me to electronically scan the text.

  Quick teasers!
  -------------------
  "pēṭu - napumcakam (நபும்சகம்)"

  "peṇmai viṭṭu āṇ avāvuva pēṭu, ali eṉappaṭum; cikaṇṭi (சிகண்டி) mutaliyōr."

  "āṇmai viṭṭu allatu avāvuva pēṭu, pēṭi eṉappaṭum; pirukannaḷai (பிருகந்நளை), vīṇāpati (வீணாபதி) mutaliyōr."

  ++++++++++++++++++++++++++++++++++++++
  அன்புடன்,
  ராஜம்

  ReplyDelete
 2. அன்புள்ள முனைவர் இராச'ம்,

  நீங்கள் இங்கும் அந்த மிக அருமையான பொறுக்குமணிகளைப்
  பகிர்ந்தமைக்கு நன்றி.! பேடு என்னும் நடுவிரல் தொடர்பான
  எண்ணவோட்டம் பல அருமையான இலக்கியப் பகுதிகளைச்
  சுவைக்க இடம் அளித்தது.

  உங்கள் சுட்டுகள் மிகவும் பயனுடையவை!

  அன்புடன்
  செல்வா

  ReplyDelete
 3. அன்புடன் ராஜம் அவர்களுக்கு வணக்கம்

  தவறு அல்லது பாவச்செயல் ஒன்றின் விளைவாகவே அலி / பேடி என்னும் பிறப்பை நமது இலக்கியங்கள் சித்திரித்து இருக்கின்றன எனத் தெரிகிறது.
  அலி என்ற சொல்லை நாம் பிரக்ஞை இன்றிப் பொதுவாகப் பயன்படுத்துகிறோம். ஆண் பெண்ணாக மாறுவதே இங்கு பரவலாக இருக்கும் நடைமுறை. நீங்கள் சுட்டியிருப்பதைப் பார்த்தால் அலி என்ற சொல் ஆணாக மாறிய பெண்ணைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனது ஐம்பதாண்டுகால வாழ்க்கையில் ஆணைப் போல உழைக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன் , ஆனால் , ஆணாக மாறிய பெண் ஒருவரையும் பார்த்ததில்லை. ஓட்டப் பந்தயத்தில் பரிசு பெற்றுப் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட சாந்தி என்ற பெண்ணைப் பற்றிய செய்திகள் மட்டும்தான் ஒரே ஒரு விதிவிலக்கு.

  ReplyDelete