Wednesday, October 13, 2010

சிவக்கும் காடு

சிவக்கும் காடு
- தேன்மொழி

ஆதிவாசிகள்-
வார்த்தைக்குள்ளிருந்து
நமக்குள் விரிகிறது ஓரு காடு
அங் கு ஆடையற்ற மனிதர்கள்
வில குகளோடு புணர்வதாக
காண்கிறது நம் மூளை


மானுடவியலாளர்களுக்கு
ஆய்வுப பொருள்
வனக்காவலர்களுக்கு
உடல் பசி உணவு

நம் சிந்தனையைத தீண்டாத
அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில்
விடுபட்டவர்கள்

தோல்வியிலிருந்து தொடங்கும் வாழ்வில்
அவர்கள் வெற்றிக் கொள்ள ஏதுமில்லை

நமக்கு வீடு வாசல்
அலைபேசி குளிர்பதனி
வங் கிக்கணக்கு வாகனங்கள்
எல்லாம் உண்டு
மேலும் நாம் வெற்றி கொள்ள
ஆதிவாசிகளும் உண்டு


வெற்றிகளால் நிர்மாணிக்கப்பட்ட
நம் வரலாற்றை
விலங் குகளை
பறவைகளை
தாவரங் களை
வென்றழித்து மெருகூட்டுகிறோம்

அவர்களால் விலங்குகளை வெல்ல முடியாது
அவை அவர்களது உடன்பிறப்புகள்
பறவைகளை வெல்ல முடியாது
அவை நண்பர்கள்
வனத்தை வெல்ல முடியாது
அவள் அவர்களின் ஆதித்தாய்

அவர்களைவிட்டு வெகுதூரம்
பயணித்து விட்டோம்
துருவ ங் களாய் எதிரெதிரே
விலகிச் சென்று விட்டோம்

பூமியை சுட்டுத தின்னும்
நம் கட்டிடங் களில் அமர
சிட்டுக குருவிகள் இல்லை
செயற்கைத தோட்டங் களில்
வர மறுக்கின்றன வண்ணத்துப் பூச்சிகள்
பூமியைத தகிக்க வைத்தோம்
உருகுகிறது பனிப்பாளம்
உயர்கிறது கடல்மட்டம்

அறுபடும் வனத்தின் ஆணிவேரிலிருந்து
தோண்டப்படுகிறது சுரங் கம்
சிதறி ஓடும் மிருக ராசிகளின்
காலடி தடங்களின் கீழ்
நாம் கனிமங்களை சேகரிக்கிறோம்
தாவரங் களின் சாபம்
தலைமுறையை அழிக்கிறது

பூவின் பெயரைச் சொல்
பறவையின் மொழியைக் கேள்
மரத்தில் உறைந்த தெய்வமெது
நிலத்தை சுமந்து பிரசவிப்பதெப்படி
வனத்தின் ரகசியங் களை வாசித்த
ஆதிவாசி ஒருத்தி கேட்கிறாள்

நாம் சமைத்த நாகரீகம்
நம்மை தின்கிறது

காட்டு மைனாவைக் கொல்வதற்கான
அவர்கள் சட்டத்தைக்
நம் சட்ட புத்தகத்தில் எ ங் கு தேடுவது

விதைகளாய் விழும் அவர்களின்
கால்வழியே இறங் கும் குருதி
பூமியின் நாளங்களில் ஓடுகிறது
தாயுடனான உறவை
ஆவண களைக் கொண்டா
நிருபிக்க வேண்டும்


உண்மை வாய்களை
தூர்த்துவிடும் போது
ஆயூதங் களைக கையிலெடுக்கிறோம்


காடு இப்போது
சிவக்கத் தொடங் குகிறது

2 comments:

  1. ஆதி மனிதனின் வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கீர்கள்.
    வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  2. மிக்க நன்றி . இக்கவிதை நான் அண்மையில் வாசித்த அரசியல் கவிதைகளில் முக்கியமானது. தேன்மொழியின் அடுத்த கவிதைத் தொகுப்பு மணற்கேணி வெளியீடாக வெளிவர உள்ளது.
    --

    ReplyDelete